கால்வாய்கள் மற்றும் ஏரிகளை சுத்தமாக மக்களின் உதவி தேவை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரைக்கமைய வெள்ளத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் உள்ள கால்வாய்கள், மற்றும் ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, தலவத்துகொட ஏரி, திவன்னா ஓயா, நாகஹமுல்ல ஏரி, கிம்புலாவல கால்வாய், பத்தரமுல்லை, மூன்று பாலங்களுக்கு அருகிலுள்ள கால்வாய் உள்ளிட்ட பல ஏரிகள் மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களில் ஜப்பபான் கோர்ஸ் புல் மற்றும் துர்நாற்றம் வீசும், பிளாஸ்டிக் போத்தல்கள், பியர் கேன்கள், செருப்புகள், சுகாதாரப் பொருட்கள், கழிவு நீர் மற்றும் எண்ணெய்கள் போன்ற ஆக்கிரமிப்பு களைகளால் மாசு படுத்தப்பட்டுள்ளன. மக்கள் தன்னிச்சையாக வீசும் இது போன்ற கழிவுகளால், தண்ணீர் முறையாக அகற்றப்படாமல் தண்ணீர் மாசடைகிறது.

நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பை முறையாக பராமரிக்காததால், எதிர் காலத்தில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என, நீர்பாசனத் திணைக்களமும், காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனமும் இணைந்து நடத்திய முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனால் நீர்வாழ் உயிரினங்களின் இறப்பு மற்றும் நீர்வாழ் சூழலில் உயிர் வாழ்பவைகளின் சமநிலைக்கு பாரிய பாதிப்புகள் போன்ற பல மீளமுடியாத பாதிப்புகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

இதனால் சாதாரண மழையின் போதும் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இது சாதாரண மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டடினார்.

வெள்ளத்தை கட்டுப் படுத்தும் போது கொழும்பு நகரையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க இந்த கால்வாய்கள் மற்றும் ஏரிகளை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அதற்கு பொது மக்களின் அதிகபட்ச ஆதரவை எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களை சீரமைக்கும் போது அவற்றின் அசல் இடத்தை சேதப்படுத்த வேண்டாம் என்றும், நடுவில் உள்ள நீர்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத செடிகளை அகற்றாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting