யாழில் இளைஞன் உயிரிழப்பு – நீதிகோரி மக்கள் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது.

நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply