மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சில சேவைகள் ஒரே நேரத்தில் முடங்கியதால் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் Teams மற்றும் Outlook சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு இடங்களில் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறை சீர்செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மைக்ரோசொப்ட் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரிட்டன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
Follow on social media