2022 இருபது 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
சிட்னியில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து, 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
Follow on social media