யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – ஒருவர் பலி, 15 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

IMG 20221221 WA0115 IMG 20221221 WA0117 IMG 20221221 WA0118 IMG 20221221 WA0120 IMG 20221221 WA0122 IMG 20221221 WA0123 IMG 20221221 WA0125 IMG 20221221 WA0131 IMG 20221221 WA0132 Follow on social media
CALL NOW Premium Web Hosting