மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி – இருவர் வைத்தியசாலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குண்டசாலை பகுதியில் நேற்று (02) மாலை மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் காயமடைந்த மேலும் இருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பழக்கடையின் உரிமையாளரும் அவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் வராபிட்டிய குண்டசாலை பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடையவர்.

மரம் விழுந்ததில் கண்டி மஹியங்கனை வீதியில் பயணித்த வேன் ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன் வேனில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply