ஒமிக்ரோன் நுரையீரலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஒமிக்ரோன் முந்தைய கொரோனா தொற்று வகைகளைக் காட்டிலும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது என்றும், இது நுரையீரலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெள்ளெலிகள் மற்றும் எலிகள் பற்றிய அமெரிக்க மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், ஒமிக்ரோன் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும், உடல் எடையைக் குறைப்பதாகவும், கொரோனா தொற்றின் பிற வகைகளால் பாதித்தவர்களைக் காட்டிலும், ஒமிக்ரோன் பாதிப்பால் இறப்பவர்களின் வாய்ப்பு குறைவாக இருப்பதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த மற்ற வகைகளுடன் ஒமைக்ரானை ஒப்பிடும்போது ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட எலிகளின் நுரையீரலில் தொற்று பாதிப்பு பத்தில் ஒரு பங்கு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களின் மனித திசுக்களை ஆய்வு செய்து வரும் ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் குழு ஆதரிக்கின்றன.

ஒமிக்ரோன் பாதித்தவர்களில் 12 பேரின் நுரையீரலை ஆய்வு செய்ததில் முந்தைய தொற்று பாதிப்புகளை விட ஒமிக்ரோன் கணிசமான அளவில் மெதுவாக வளர்ந்துள்ளது கண்டறிப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே ஒமிக்ரோன் நுரையீரலின் கீழ் பகுதிகளில் அதிகமாகன பாதிப்புகளை ஏற்படுத்தாது, அது குறைவான குறிப்பிடத்தக்க சேதத்தை மட்டும் ஏற்படுத்துகிறது, இது அதன் தீவிரத்தன்மையைக் குறைக்கும் என்று நம்புவதாக வல்லுநர்கள் கூறிகின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் தரவுகள் படி, டெல்டா தொற்று நோயாளிகளை விட ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையிலேயே இறக்கும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவாக இருப்பதாக கூறுகிறது. இதேபோன்று இங்கிலாந்து ஹெல்த் அண்ட் செக்யூரிட்டியின் நடத்திய ஆய்வில், ஒமிக்ரோன் பாதிப்பால் உயிரிழப்புகள் 70 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதாக கூறுகின்றது.

பெர்லின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் நிறுவனத்தின் கணக்கீட்டு உயிரியலாளரான ரோலண்ட் ஈல்ஸ், உருமாற்றம் அடைந்து பரவி வரும் ஒமிக்ரோன் தொற்றானது நுரையீரலுக்கு வெளியே இருந்து பாதிப்பை ஏற்படுத்த முனைகிறது என்று கூறியுள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.