121 வயது வரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்த மூதாட்டி மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாகலாந்தில் வயோதிப பெண்ணொருவர் 121 வயது வரை வாழ்ந்து காலமாகியுள்ளார்.

புபிரே புகா என்ற மூதாட்டியே வயது முதிர்வு காரணமாக (16-03-2023) மரணமடைந்துள்ளார்.

121 வயதாகியும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்துள்ளார்.

மேலும், இதுவரை இவர் மருத்துவமனை பக்கமே சென்றது இல்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூதாட்டி புபிரே புகா மரணமடைந்த செய்தி அறிந்ததும் உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இத்தனை வயது வரை வாழ்ந்ததை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மேலும் கடந்த மாதம் நடந்த நாகாலாந்து சட்டசபை தேர்தலில் இவர் தபால் ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply