மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றும் அரசியல்வாதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11 லட்சம் ரூபாவை மின்சார சபைக்கு வழங்காமல் ஏமாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மின்சார சபையின் ஆட்சி அதிகாரத்திடம் இருந்து சில தகவல்கள் கோரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இருந்த போதிலும், அரசியல்வாதிகளுக்கு பயந்து தகவல் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் விரைவில் பெறப்பட்டு நாட்டு மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தப்படும் என எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply