பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா ஒமைக்ரான் வைரசை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, லம்ப்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது.

கடந்த நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசால் தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பிரான்சில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பி.1.640.2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வைரசை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்சின் மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா ஒமைக்ரான் வைரசை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானாவை விட 46-க்கும் மேற்பட்ட பிறழ்வு களை கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஒமைக்ரான் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply