பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்ததால் பெண்ணின் வயிற்றில் இருந்த கரு கலைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உதையால் கரு அழிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார்.
இதன்போது கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் சிப்பாய்க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாய்த்தர்க்கம் முற்றியதில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் சிப்பாய் பலமுறை உதைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் கைதான கடற்படைச் சிப்பாய் புல்முடே பிரதேசத்தில் உள்ள முகாமில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
Follow on social media