மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

இதன்படி வீடுகள் ,பாடசாலைகள், வழிப்பாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் பணியிடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக இராணுவம், காவல்துறை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், 32 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில், 51 ஆயிரத்து 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு கண்டி, புத்தளம், குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting