குளிரூட்டியிலிருந்து வெளியேறிய புகையால் தாயும் மகளும் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

குளிரூட்டியிலிருந்து கரும்புகை வெளியேறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே ஏகாம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா. அவரது மகள் நஸ்ரிபேகம். அவர்கள் இருவரும் நேற்று இரவு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அந்த அறையில் இருந்த குளிரூட்டியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குளிரூட்டியிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Follow on social media
CALL NOW

Leave a Reply