அதிகரிக்கும் குரங்கு அம்மை தொற்று – சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உலகளவில் குரங்கு அம்மை வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை இந்த தொற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ், தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.

மேலும் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும்.

தற்போது அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting