காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடமாடும் சேவை நடைபெற்ற இடத்தின் முன்பாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கும் குறிப்பாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மூலம் கடிதங்கள் கிடைக்கப் பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த அலுவலகத்துக்கு பதிவுக்கு சென்றபோது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை வழிநடத்தபவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து போலீசாருக்கும் போரட்டக்காரர்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டது.

பின்னர் விரும்பிய மக்கள் சென்று பதிவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting