’மின்னல் முரளி’ புதிய சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படம் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

மலையாள இளம் நடிகர்களில் பிரபலமான நடிகர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2-ல் வில்லனாக நடித்திருந்தார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘கள’ ‘காணேகாணே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில், தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என 5 மொழிகளில் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்த‘மின்னல் முரளி’ திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நெட்பிளிக்ஸில் வெளியான அத்திரைப்படம் 2021-ன் சிறந்த மலையாளத் திரைப்பட ஐஎம்டிபி வரிசையில் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. முதலிடம் த்ரிஷ்யம்-2.

Follow on social media
CALL NOW

Leave a Reply