இலங்கையில் 97 வகையான பொருட்களுக்கு வற் வரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த 138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு அதனை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்திற்கு நேற்று(08) சபை ஒத்திவைப்பு வேளையில் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“பல வற் விலக்குகள் வழங்கப்படுவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதை பெற வேண்டும். அதனால்தான் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வரி விலக்கை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீத வருமான அதிகரிப்பு அதாவது 378 பில்லியன் ரூபா வருமானம் பெற முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது நாட்டின் தேவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply