மௌலவியை சந்தித்து அப்பெண் உதவி கோருகின்றார். இந்நிலையில் மௌலவி அப்பெண்ணிற்கு குறித்த மத்ரஸாவில் மாணவர்களை கண்கானிப்பதற்கான பதவி ஒன்றிறை வழங்கியதாக தனது வாக்குமூலத்தில் அப்பெண் உறுதிப்படுத்துகின்றார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என அம் மத்ரசாவில் கடமையாற்றிய கண்காணிப்பாளரான பெண்மணி (வயது-34) என்பவரின் வாக்குமூலம்.
வாக்குமூலத்தில் அவர் தெரிவிக்கையில்,
நான் அன்றைய தினம் இரண்டரை மணிக்கு மத்ரசாவினுள் நுழைந்த போது மரணித்த மாணவனான முஸ்அப்பை கண்டேன். சாப்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தார்
பின்னர் நான்கரை மணியளவில் மத்ரசாவிலிருந்து வீட்டுக்கு வந்து மீண்டும் 6.30 மணியளவில் மத்ரசாவுக்கு சென்றேன். அப்போது இந்த சம்பவம் நடந்து முடிந்திருக்க வேண்டும்.
நான் மேல் மாடிக்குச் சென்று எனது பேஸ் கவரை கழற்றி விட்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்ற போது மேல் மாடியில் இருக்கின்ற பிள்ளைகள் மஹ்ரிப் தொழுவதை அவதானித்தேன். அந்த நேரம் கீழ் தளத்திலே இருந்த மாணவர்கள் தொழவில்லை. அப்போதுதான் மத்ரசா அதிபரான சானாஸ் மௌலவி ‘ஒரு ஆள அடித்து வளர்த்தாட்டி வச்சிருக்கன்’ என்றார். எனக்கு மட்டுமல்ல அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் அவர் கூறிய இந்த வார்த்தை தெளிவாக கேட்டது.
அப்போது நான் ‘யார வளத்தாட்டி வச்சிருக்கிறீங்க’ என கேட்டேன். அதற்கு அவர் யாரை அடித்துள்ளேன் என்று பெயர் குறிப்பிடவில்லை.
பின்னர் நான் ஓடி வந்து மதரசாவின் சி.சி.ரி.வி கமராவைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரம் ஒரு மாணவன் ஓடி வந்தான். அதன் பின்னர் இன்னும் சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். பிறகு ஏனைய மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். என்ன சுனாமியா வந்து விட்டது? ஏன் மாணவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
அதன் பிறகு மற்றொரு மாணவர் ஓடி வந்து சி.சி.ரி.வி கமராவின் Switch Off பண்ணினார். பின்னர் கமராவில் எதுவும் தெரியவில்லை.
அதற்கு பிறகு மௌலவி தொலைபேசியில் ஏதோ பேசினார். பின்னர் மூன்று பேர் வந்தார்கள். சி.சி.ரி.வி.கமராவின் வயர்களை கழற்றினார்கள். நான் அத்தோடு அங்கு ஓரிடத்தில் அமர்ந்துவிட்டேன்.
கேர்ட்டின் சீலையை இழுத்து மறைத்துவிட்டார்கள். பின்னர் பிள்ளைகளிடம் பாடத்தை கேளுங்கள் என்று கூறிவிட்டு மௌலவி அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஏதோ ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் மரணித்த மாணவன் யார் என்று விசாரித்தேன்.
அப்போதுதான் முஸ்அப் என்று சொன்னார்கள். கண் கலங்கி பீதியடைந்தேன். அதிர்ச்சியில் உறைந்து போனேன். நான் பகல் தானே முஸ்அப்பை கண்டேன் என்று கூறி அழுதேன்’’ என்றார்.
இச்சம்பவம் தற்கொலைதான் என கதை பரப்பி குறித்த மெளலவி தப்பிக்க முனைந்த போதிலும் இதனைக் கொலை என நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களும் சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மெளலவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என தெரிவித்தார்.
Follow on social media