இந்திய காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலில், வருடந்தோறும் அடியார்கள், அதிக அளவில் யாத்திரையாக வருகைதந்து தரிசனம் செய்வது வழமையாக உள்ளது.
இந்நிலையில் ஆங்கில புது வருட பிறப்பை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதியருகே கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.
இதன்போது, அவர்களில் ஒரு பிரிவினரிடையே இன்று அதிகாலை 2.45 மணியளவில் முரண்பாடு ஏற்பட்டதாகவும், இதனால் சிலர், ஒரு பிரிவினரை தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள்