கொழும்பில் பாரிய தீ விபத்து – 15 பேர் காயம், 6 பேர் கவலைக்கிடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொழும்பில் ஆடை விற்பனையகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமையே முழு கட்டிடத்திற்கும் தீ பரவியமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தீ பரவலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அத்துடன் 15 பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்

இவர்களுள் 6 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உட்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் ஆடை விற்பனையகம் தவிர்ந்த ஏனைய சில கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOW

Leave a Reply