யாழில் ரோலுக்குள் இருந்த கறல் பிடித்த கம்பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம் 10 ரோல்கள் வாங்கிச் சென்றுள்ளார்.

உறவினர்களின் வீட்டில் குறித்த ரோலை உண்பதற்காக பரிமாறியபோது, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஊட்டுவதற்காக தாய் ரோலை பிரித்த போதே ரோலிற்குள் கறல் பிடித்த கம்பி இருந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான படங்களை குறித்த வெதுப்பகத்தில் ரோலினை கொள்ளளவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

இதனிடையே தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் இவ்வாறான உணவக சீர் கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொதுமக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply