மலேசியாவில் சாதனை படைத்த மன்னார் மாணவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

டிசம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணித போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியில் உலகளாவிய ரீதியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றினர்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்களும் கலந்து கொண்டு மனக்கணித போட்டியில் பங்கு பற்றி வெற்றிக் கிண்ணங்களை வென்றுள்ளனர்.

அந்த வகையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான எஸ். சிறோன்றாஜ் D பிரிவில் பங்கு பற்றி 2 ஆம் இடத்தையும், மாணவன் வி. செஸான் 3 ஆம் இடத்தையும், லஸால் கிட்ஸ் கேம்பஸில் கல்வி கற்கும் மாணவி ஜே. ரெறா ஜெசாரி 3 வது இடத்தையும், யோசப் வாஸ் ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் கே. அறிஸ்மித் 3 வது இடத்தையும் , தோட்டவெளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஆர். ரியானா 3 ஆம் இடத்தையும் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்கள் மன்னார் UCMAS நிறுவனத்தின் நிர்வாகியும் ஆசிரியருமான ந. கேதீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்கு பற்றி வெற்றிக் கிண்ணங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply