யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த முதியவரை வம்பிழுத்து ஆசிரியை கல்லால் எறிந்து தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
நேற்றையதினம் ஆணைக்கோட்டை மூத்தநைனார் கோயிலில் தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் இரண்டு தரப்புக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருக்கிறது.
அப்போது அந்த கோயிலில் பணியாற்றும் ஆனைக்கோட்டையை சேர்ந்த 62 வயதுடைய நபர் இரண்டு தரப்புடனும் பேசி பிரச்சினையை சுமூகமாக தீர்த்திருந்தார், அத்தோடு அந்த பிரச்சினையும் நேற்றோடு முடிந்தது.
இந்த நிலையில் இன்று காலை வேலைக்காக மூத்தநைனார் கோயிலுக்கு வழக்கம் போல ஆணைக்கோட்டைப் பகுதியில் வசிக்கும் மூத்தநைனார் கோயிலின் பணியாளரான முதியவர் சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் நேற்று ஆலயத்தில் இடம்பெற்ற தொலைபேசி பிரச்சினையின் போது ஆலயத்தில் நின்ற, அந்த பிரச்சினையுடன் சம்மந்தப்படாத மூத்தநைனார் கோயில் அருகில் வசிப்பவரும், யாழ் பாடசாலையில் ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையுமான சொர்க்கலிங்கம் பிரியா வீதியில் சென்று கொண்டிருந்த மூத்தநைனார் கோயில் பணியாளரை நேற்றைய பிரச்சினை தொடர்பில் தவறான முறையில் பேசியதுடன் கல் ஒன்றை எடுத்து அவரை நோக்கி எறிந்திருக்கிறார், அப்போது அந்த கல் கோயில் கணக்காளரின் தலையில் பட்டதில் அவர் காயமடைந்துள்ளார்.
தொடர்ந்து காயமடைந்த முதியவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடொன்றை பதிவு செய்ததுடன் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கும்போது.
குறித்த பிரியா என்ற பெண் இங்கிருக்கின்ற மக்களுடன் நாகரிகமாக கதைக்க மாட்டார் என்றும், மாறாக அனைவருடன் சண்டை பிடித்துக்கொண்டே இருப்பார் எனவும் தெரிவித்தனர்.
தவிர வயதாகியும் திருமணமாகாத நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டது போல் நடந்துகொள்கிறார் என்றும், இப்படியான பெண் எப்படி ஆசிரியராக பணியாற்றுகிறார், மக்களுடனே கதைத்து பேச தெரியாத போது அவர் கல்வி கற்பிக்கும் மாணவர்களின் நிலை தொடர்பில் அச்சம் எழுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த ஆசிரியர் மீது பாதிக்கப்பட்டவர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு கொடுத்து மாலை நேரம் ஆகியும் (பல மணி நேரம்) இது வரை ஆசிரியை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளவும் இல்லை, கைது செய்யப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
மேலும் பொலிஸார் நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தவிர அவர் ஆசிரியராக பணியாற்றுகின்ற பாடசாலை நிர்வாகமும் குறித்த ஆசிரியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது
Follow on social media