வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான மருதடி விநாயகர் ஆலயத்தின் இன்றைய தினம் ஆவணி சதுர்த்தி மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு திவாகர குருக்கள் அவர்கள் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து வசந்த மண்டபம் பூஜை நடைபெற்று விநாயகப் பெருமான் பக்தர்கள் குடை சூழ கணபதி பெருமான் வீதி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து உள்ளார்.
இந்த கண்கொள்ளாக் காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் விநாயகப் பெருமானின் உடைய அருள் பெறுவதற்கு ஆலயத்துக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.



