யாழ் . வருகைதந்த மைத்திரிபால சிறிசேனா – யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியுடன் சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் (29) காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாக விகாரதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் மைத்திரிபால சிறிசேனா, இன்று வியாழக்கிழமை (29) முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting