2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத் சிறப்பாக இடம் பெற்றது இலங்கையின் வடக்கி,கிழக்கு மற்றும் தென் பகுதிகளொல் இருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளிலும் இருந்து விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்
காலை தொடக்கம் பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம் பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகளும் இடம் பெற்றது.
உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து புனித பாலாவி தீர்த்தக்கரையில் நீராடி தீர்த்தம் எடுத்து ஆதி சிவலிங்கத்திற்கு தண்ணீர் வார்த்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நெய்காப்பு நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media