ஆபாச நடனம் ஆடிய பிரபல கவர்ச்சி நடிகைக்கு சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சன்னி லியோன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியாவிலேயே இருக்க முடியாது என எச்சரித்து வருகின்றனர்.

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள நடன வீடியோ ஒன்று இந்து மதத்தை அவமதிப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை தடை செய்யக்கோரி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேசம் மதுராவை சேர்ந்த தலைமை மத குருவான சந்த் நாவல் கிரி மகராஜ் கூறியதாவது:-

கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்னி லியோனும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். மீறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அவர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.

இவ்வாறு சந்த் நாவல் கிரி மக்ராஜ் எச்சரித்துள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply