சொகுசு கார் மரத்துடன் மோதி விபத்து – பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுபளை பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது

இச்சம்பவம் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கல்முனையில் இருந்து திருக்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் மரத்துடன் மோதியதில் காரை ஓட்டிச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவர் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சசி என தெரிய வந்துள்ளது

அத்துடன் குறித்த கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நிந்தவூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting