லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இம்மாதத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும், முன்பு இருந்த விலையிலேயே லாஃப்ஸ் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை ரூ.3,985க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரை ரூ.1,595க்கும் கொள்வனவு செய்ய முடியும்.

Follow on social media
CALL NOW

Leave a Reply