புத்த பகவான் ஆக்கிரமிப்பின் சின்னம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புத்த பகவான் அமைதியின் சின்னமாக பல நாடுகளில் வணக்கப்படும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் புத்த பகவான் எங்களின் நிலங்களை பறிக்கின்ற ,எங்களின் மத அடையாளங்களை அழிக்கின்ற, காணி பிடிப்பதற்கான ஆக்கிரமிப்பின் ஒரு அடையாளமாக பயன்படுத்தப்படுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ:சாட்டினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்றபெயரிலேயே அரசு வெளிப்படையாக புத்த மதம் மாத்திரம்தான் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மாதமாக இருப்பதாக ஏற்றுக்கொள்கின்றது. இலங்கையின் பூர்வீக மதமான இந்து மதம் கூட இந்த வரிசையில் வரவில்லை. ஆகவே இலங்கையைப் பொறுத்தவரையில் புத்த மதத்திற்கு அப்பால் தான் ஏனைய மதங்கள் என்ற செய்தியை இந்த தலைப்பு சொல்லி நிற்கின்றது என்றார்.

நான் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்குள்ள எம்மவர்களின் வீடுகளுக்கும் சென்றுள்ளேன். அங்கு கூட புத்த பகவானை அமைதியின் அடையாளமாக வைத்திருக்கின்றார்கள். இந்து, கத்தோலிக்க மதத்தவர்களும் அப்படித்தான் புத்தரை வைத்திருக்கின்றார்கள் ஆனால் இலங்கையில் புத்தபகவானை தற்போது இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்று அமைச்சர் சிந்திக்க வேண்டும்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் எங்களின் நிலங்களை பறிக்கின்ற ,எங்களின் மத அடையாளங்களை அழிக்கின்ற ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாக புத்தபகவானை பயன்படுத்த்துகின்றனர். வெளிப்படையாக கூறுவதானால் காணி பிடிப்பதற்கு புத்த பகவானை பயன்படுத்த்துகின்றனர். இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply