மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை அதிகரிப்புடன் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக எல்லை மாற்றப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இணை அமைச்சரவைப் பேச்சாளரும் எரிசக்தி அமைச்சருமான கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் 3,000 ரூபாவாக தொடர்ந்து இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்புகளுக்கான அதிகபட்ச எரிபொருள் விநியோகம் 10,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மண்ணெண்ணெய் விலையை திருத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளார்.

தற்போதைய விலையின் கீழ் மண்ணெண்ணெய் காரணமாக மிகப்பெரிய நட்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting