தனது இரு பிள்ளைகளைக் கொன்ற தந்தை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று அம்பாறை பெரிய நிலாவெளி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
29 வயதான மகனையும்15 வயதான மகளையுமே தந்தை கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த தந்தையும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 63 வயது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்ட அவரது இரண்டு பிள்ளைகளும் பேச்சுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Follow on social media