வீதியில் வைத்து கடத்தப்பட்ட மாணவி – தாய் மீது தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு தாயுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தனது காதலன் என கூறிக்கொண்ட இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்துகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றாதாகவும், கடத்தப்பட்ட மாணவியின் தாயை தாக்கி விட்டே மாணவியைக் கடத்தி சென்றதாக முறைப்பாடு செய்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு ஒன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது , முச்சக்கரவண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர் மாணவியை கடத்திச் சென்றதாக அவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாணவி கடத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் தாய் ஏற முற்பட்டதையடுத்து சந்தேகநபர் அவரை உதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply