கடத்தப்பட்ட 15 வயது சிறுமி – வெளியான காணொளியால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மினுவாங்கொடை ஓபாத்த பிரதேசத்தில் காதலனால் கடத்தப்பட்டதாக கூறப்படும் 15 வயது சிறுமி தனது தாயாருக்கு காணொளி அழைப்பொன்றை அனுப்பி தான் கடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

நான் விரும்பியே காதலனுடன் சென்றேன்
குறித்த சிறுமி வெளியிட்ட காணொளியில், “என்னை கடத்தி விட்டதாக செய்திகள் வெளியானது. எனினும் அதில் உண்மையில்லை. நான் விரும்பியே காதலனுடன் சென்றேன்.முதலில் இரு வீட்டாரும் என் உறவை விரும்பினர். பிறகு அம்மாவுக்கு பிடிக்கவில்லை.

22 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை திருமணம் செய்து வைக்க அம்மா நினைத்தார். பிடிக்காததால் சண்டை போட்டேன். நான் இந்த பயணத்தை விருப்பத்துடனே வந்தேன். நாங்கள் இருவரும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களை வாழ விடுங்கள்” என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை அவர் முக்கிய ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தாய் வெளியிட்ட காணொளியில் கடத்தல் தொடர்பான சிசிடிவி காணொளியும் இடம்பெற்றுள்ளது.

15 வயதுடையவர் இன்னமும் சிறுமி, என்பதால் அவர் திருமணம் தடை செய்யப்பட்டதாகும். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், “கடத்தல் தொடர்பில் தாய் மாத்திரம் ஊடகங்களுக்கு முறைப்பாடு செய்ததாகவும், ஆனால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் இருவரும் விரும்பியே சென்றதாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்” என அவர் கூறியுள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting