துங்கல்பிட்டிய, கப்புங்கொட நங்கூரம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த 5 இளைஞர்கள் நேற்று (01) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களுள் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
ஏனைய நால்வரையும் பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவர்கள் நால்வரில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பமுனுகம மற்றும் ஏகல பிரதேசங்களை சேர்ந்த 17 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அம்பேவெல பகுதியை சேர்ந்த காணாமல் போன 21 வயதுடைய மற்றைய இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துங்கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media