இயக்குனருடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் – வைரல் வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்திற்கு பின் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்தும் வருகிறார். இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்தும் வருகிறார்.

லியோ படத்தினை பார்த்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று 27 ஆம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரி சென்னை YMCA நந்தனமில் நடந்தது.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவடையும் போது என்னை அறிந்தால் படத்தின் அதாரு அதாரு பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க கீர்த்தியும் கெளதம் வாசுதேவ் மேனனும் ஆட்டம் போட்டு வைப் செய்திருந்தனர். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply