கச்சதீவு திருவிழா ஆரம்பம் – இந்தியர்கள் புறக்கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன.வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் .இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகைதரவில்லை.

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருவிழாவில் கடற்ப்படை உயர் அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting