கொழும்பில் அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று காலை(05) இந்த சடலம் கரையொதுங்கியதாகவும், சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா கிருசாந்த் என்ற 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவரின் உடலிலும் முகத்திலும் காயங்கள் காணப்படுவதாகவும் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றிருந்ததாகவும், இந்தநிலையிலேயே இன்றையதினம் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்படுகின்றது.

Follow on social media
CALL NOW

Leave a Reply