மட்டக்களப்பில் பாரிய போராட்டம் – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தனர்.

போராட்டக் களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதே என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் போராட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply