யாழ் – முற்றவெளியில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி (21.12.2023) ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தென்னிந்திய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது இலங்கைக்கு வருகை தந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media