2000 குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேல் – போர் குற்றங்களின் உச்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காஸாவில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக என்கிளேவ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் கொல்லப்பட்ட 5,087 பேரில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

மேலும் இஸ்ரேலிய தாக்குதல்களில், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கு இடையில், 182 குழந்தைகள் உட்பட 436 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலில் உயிரிழந்த 1,400 பேரில் குறைந்தது 14 குழந்தைகள் இருப்பதாகவும் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட சுமார் 200 பேரில் குழந்தைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஹமாஸ் கடந்த 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களது விபரம் பற்றிய தரவுகளை இஸ்ரேல் வெளியிடவில்லை.

Follow on social media
CALL NOW

Leave a Reply