3 வாரங்களுக்குள் 3,334 சிறுவர்களை பலிகொண்ட இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் 03 வாரங்களுக்குள் 3,334 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது.

காசா பகுதியில் இரு தரப்புக்கும் இடையிலான போரினால் சுமார் 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவர்களில் 40 விகிதமானவர்கள் குழந்தைகள் என்றும், மேலும் 1000 குழந்தைகள் காணவில்லை என்றும் அரச சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை வரலாற்றில் இடம்பெற்ற யுத்தங்களிலேயே அதிகளவான சிறுவர்கள் கொல்லப்பட்ட போரின் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலும் ஒன்று என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow on social media
CALL NOWPremium Web Hosting