காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் – 50 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குடியிருப்புகள் உள்ள பகுதியை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாகவும் ஹமாஸ் அமைப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளர்.

ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து வெளியான வீடியோவில் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஹமாஸ் தெரிவித்து இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸ் போராளிகளிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் டெல் அவிவில் செய்தியாளர் இடையிலான சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவிக்கையில், காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரிடம் சரணடைவதற்கு சமமானது.

ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.

பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பிறகும், இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பிறகும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை நிராகரித்தது.

அதே போன்று இஸ்ரேல் மீது அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் போர் நிறுத்தம் என்பதை ஒப்புக்கொள்ள இயலாது. இந்தப் போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே அக்டோபர் 7 ஆம் திகதி முதல் போர் இடம்பெற்று வருகின்றது. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8,306 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் 3,457 குழந்தைகள், 2,136 பெண்கள் மற்றும் 480 முதியவர்கள் அடங்குவார்கள். அத்துடன் 31 ஊடகவியலாளர்கள் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்இ 21,048 பேர் காயமடைந்துள்ளனர். 1,050 குழந்தைகள் உட்பட 1 950 பேர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply