யாழில் போராளிகள் போன்ற ஆடை – 6 பேரிடம் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை (27) நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

404637576 784583960094107 3834449358980922464 n
404652530 784584140094089 6435925898329286331 n
404633531 784584066760763 3683858177263718363 n
404633531 784584066760763 3683858177263718363 n 720x445
404718378 784584093427427 2935310936939968338 n
Follow on social media
CALL NOW

Leave a Reply