யாழ் பல்கலைக்கழக மாணவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்தபோது விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கபட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள்,

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பிலேயே விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று திங்கட்கிழமை சுமார் 3 மணத்தியாலத்திற்கும் மேலாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.

இ.தர்சன் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை ஒன்றில் ஊடகவியாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply