பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக கனடா திகழ்கிறது – இந்திய பகிரங்க குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கனடா பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழுவதாக இந்திய மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், வன்முறை அமைப்புகளின் புகலிடமாக கனடா திகழ்கிறதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

“ஹர்தீப் சிங், நிஜ்ஜார் வழக்கில் எந்த தகவலையும் இந்தியாவுக்கு கனடா வழங்கவில்லை. இந்தியாவுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கனடாவில் இருந்து குற்றச்செயலில் ஈடுபடுவோர் பற்றி அந்நாட்டு அரசுக்கு ஆதாரம் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும்.

குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் அந்நாட்டு அரசு செயல்பட வேண்டும் எனவும் ந்திய மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கும் பங்குண்டு என கனடா தெரிவித்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply