இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக இந்திய அணி தெரிவாகியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றதற்கு அமைய இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றள்ளது இந்திய அணி.

வங்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் Virat Kohli 117 ஓட்டங்களையும், Shreyas Iyer 105 ஓட்டங்களையும், Shubman Gill 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து இன்று சச்சினின் அதிக முறை ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

இதுவரை ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை பெற்றிருந்தார்.

நியூசிலாந்த அணி சார்பில் பந்து வீச்சில் Tim Southee 3 விக்கெட்டுக்களையும், Trent Boult 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதற்கமைய, 398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் Daryl Mitchell அதிகபட்சமாக 134 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் Kane Williamson 69 ஓட்டங்களை பெற்றார்.

இதன்படி இந்திய அணி இந்த ஆண்டுக்கான உலக கிண்ண தொடரில் முதலாவது அணியாக இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

அதேநேரம் நாளைய தினம் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply