முட்டை, இறைச்சி, வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பண்டிகை காலம் அண்மித்துள்ள நிலையில், சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

முட்டை இறக்குமதியை அரசு நிறுத்தியதன் பின்னணியில் சந்தையில் முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் முட்டைகள் 55 ரூபாவுக்கு மேல் விலைக்கு விற்கப்படுகின்றன.

இதேவேளை, சந்தையில் கோழி இறைச்சியின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

சந்தையில் இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 440 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழிவகைகள் பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting