இன்று நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக பிளேன் டீ விலை 5 ரூபாவினாலும் பால் தேனீர் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சாப்பாட்டு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply