குறைவான நேரம் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.

இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து விட்டால், பிறகு மீண்டும் தூங்குவது கடினமாக இருக்கும். இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் வாடுபடுபவர்களுக்கு, உற்சாகமாக வேலை செய்வதிலும் பிரச்சனை இருக்கும். ஆழ்ந்த தூக்கம் இல்லை என்றால், உங்கள் வேலை திறன் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நல்ல, ஆழ்ந்த தூக்கத்தை பெறவும் உதவும்.

பாதாமில் “ட்ரிப்டோபன்” உள்ளது இது மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மூளையின் சக்தியை அதிகரிப்பதுடன் பாதாம் உங்களுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும்.

அதே நேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் எடுத்துக் கொள்வது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

ஊட்டசத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தில் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கும் சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால். இது இயற்கையாகவே உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும்.

டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை கொடுக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் “செரோடோனின்” உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நன்றாக தூக்கத்தை கொடுக்கும்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply